நீட் தேர்வில் தோல்வியுற்றதால் விழுப்புரம் மாணவி பிரதிபா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வால் கடந்த வருடம் அனிதா,இந்த வருடம் பிரதிபா என இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.