பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி, : நூற்றுக்கணக்கில் காளைகள், மாடுபிடி வீரர்கள் வருகை..

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதையொட்டி, காளைகள்- மாடுபிடி வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. விதிமீறல் ஏதுமின்றி, அசம்பாவித சம்பவங்கள் இன்றி அங்கு போட்டிகள் அமைதியாக நடந்து முடிந்தன.

இந்நிலையில், பாலமேட்டில் இன்று போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

போட்டிகளில் பங்கேற்பதற்காக 800 காளைகள் மற்றும் 800 வீரர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்க உள்ளன.

வீரர்கள் தேர்வானபின், அவர்களுக்கு உடல்தகுதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. விதிமுறைகளின்படி போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்துள்ளன.

இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..

ஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..

Recent Posts