இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..

தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உழவுக்கு உறுதுணையாக விவசாயிகளின் குடும்பத்தில் ஐக்கியமாகி விட்டவை கால்நடைகள். உழவுக்கு உதவும் மாடுகளுக்கும் பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி மணியைக் கட்டிவிட்டு மாடுகளை நீராட்டி சீராட்டி அலங்கரித்து ஊர்வலமாகக் கொண்டு செல்வது வழக்கம்.

ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் மூலம் தமிழர்களின் வீரத்துடன் மாடுகள் மீதான மனிதர்களின் பாசமும் இணைந்திருப்பதுதான் பொங்கலின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.