தந்தை பெரியாரின் 140-வது பிறந்த தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை..

சென்னையில் பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

அவருடன் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும் மரியாதை செலுத்தினார்.