மண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…

தமிழ் பொறுக்கி

1 October

#கல்லல்
#சிவகங்கை

#தைல_மரம் தீமைகள் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்)

புல் வகைகளுக்கு இந்த மரம் பெரிய எதிரி.இந்த மரம் 8 மணி நேரம் நிலத்தடியில் கிடைக்கும் நீரை உறிஞ்சி வேகமாக வெளியேற்றும் . யூகலிப்டஸ்,பைன் போன்ற மரங்களால் நிறைய நீர் நிலைகள் ,ஆறுகள் கூட வற்றிப்போகும் அபாயம் உள்ளது .இது நமது சீமை கருவை மரங்களின் தன்மைக்கு ஒத்தது. மொத்த தமிழ்நாடும் இனிவரும் காலங்களில் நிலத்தடி நீரை நம்பியே உள்ளது . நிலத்தடி நீரை காப்பற்ற வேண்டியது, தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரு குடிமக்களின் கடமையுமாகும் . இவை அதிக அளவில் வளர்க்கப்பட்டால் மண்ணின் தன்மை கெட்டுவிடும் .ஆனால் நம் நாட்டில வளர்க்க ஆயிரம் மரங்கள் இருந்தாலும் காசுக்கு ஆசைப்பட்டு இம்மரத்தை வளர்க்க கிளாஸ் எடுக்கிறது அரசு. மண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி என அழைக்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை எதிர்ப்போம். நமது மண்ணின் வளத்தையும், நீராதாரத்தையும் காப்போம்… பரவட்டும் விழிப்புணர்வு… வலுக்கட்டும் எதிர்ப்புக் குரல்…