முக்கிய செய்திகள்

உ.பி. அனல் மின்நிலைய விபத்து: காயமடைந்தவர்களை பார்வையிட்ட ராகுல்

உத்தரப்பிரேதச மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் நாடாளுமன்றத் தொகுதி என்பதால் ரேபரேலியில் நிகழ்ந்த அனல்மின் நிலைய விபத்து நாடு முழுவதும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்தில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) சென்று பார்வையிட்டார். உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யா நாத் தலைமையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகின்றன. கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர். தற்போது அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 16 பேர் பலியாகி உள்ளனர்.