முக்கிய செய்திகள்

தொடரும் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் விட்டு, விட்டுப் பெய்த மழை, காலையிலும் தொடர்கிறது. தியாகராயநகர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain continues: School leaves in 10 districts