இரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் காரணம் என்ன?

இந்திய ரயில்வேயில் சில ரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படியான பெயருக்கு என்ன அர்த்தம். அதை ஏன் குறிப்பிட்ட ரயில்களுக்கு வைத்திருக்கிறார்கள் எனக் காணலாம்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவில் உயர் ரக ரயில்களில் ஒன்றாகும். இந்த ரயில் இந்தியத் தலைநகர் டில்லிலிருந்து மற்ற மாநில தலைநகரங்களை இணைக்கும் ஒரு ரயில். இந்தியில் தலைநகர் என்றால் ராஜ் தானி என அர்த்தம் அதன் காரணமாகவே ராஜ் தானி எக்ஸ்பிரஸ் என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுவதும் ஏசி மயமாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் டிக்கெட் விலையில் ரயில் பயணத்தின் போது உணவும் வழங்கப்படும். இந்த ரயில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்லும் எந்த ரயில் சென்றாலும் டிராஃபிக் ராஜ்தானி ரயிலுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும்.

சதாப்தி எக்ஸ்பிரஸ்
ராஜ்தானி ரயில் நீண்ட தூரப் பணத்தைச் செய்யும் ரயில்களாக இருக்கும். இதுவே ஆனால் சதாப்தி ரயில் வெறும் 400-800 கி.மீ வரை தான் அதிகபட்சம் பயணிக்கும். இந்த ரயில் 1989ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு அதன் காரணமாகத் தான் இதற்கு சதாப்தி எனப் பெயரிடப்பட்டது. இந்தியில் சதாப்தி என்றால் நூற்றாண்டு எனப் பொருள். இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும். ராஜ்தானி ரயிலில் உள்ள அதே வசதிகள் இந்த ரயிலிலும் இருக்கிறது

துரந்தோ எக்ஸ்பிரஸ்
துரந்தோ எக்ஸ்பிரஸ் மிகப் பிரத்தியேகமான ரயில் மேலே உள்ள இரண்டு வகை ரயில்களை விட இது சற்று வித்தியாசமானது. இந்த துரந்தோ என்ற வார்த்தை பெங்காலி மொழியில் உள்ள வார்த்தை. இந்த வார்த்தைக்கு அர்த்தம் இடைநில்லாத என்பதாகும். பெயருக்கு ஏற்றார் போல இந்த ரயில் தன் பாதையில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். இந்த துரந்தோ ரயில் வாரம் முழுவதும் இயங்காது. வாரத்தில் 2-3 நாட்கள் தான் பெரும்பாலும் இயங்கும். விழாக் காலம் என்றால் ஸ்பெஷல் ரயிலாக அவ்வப்போது துரந்தோ எக்ஸ்பிரஸ் அறிவிக்கப்படும்.

இது தான் இந்திய ரயில்வே உள்ள சிறப்பான ரயில்களில் பெயர்களுக்கான அர்த்தம். இந்த பெயர்கள் பலருக்குப் பரிட்சியமாக இருந்தாலும் அதற்கான அர்த்தம் பலருக்கும் தெரியாது.