இராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் :காரைக்குடியில் ப.சிதம்பரம் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியேற்பு..

இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி 21.05.1990-ல் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதுாரில் தேர்தல் பரப்புரைக்கு வந்த போது விடுதலை புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்த துயரச் சம்பவம் நிகழ்தப்பட்டது. ராஜீவ் காந்தியுடன் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினம் நாடு முழுவதும் காங்கரஜ் கட்சியல் அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாத எதிர்ப்பு நாளாகவும் கடைப்படிக்கப்படுகிறது.

காரைக்குடி கல்லுாரி சாலையில் அமைந்துள்ள இராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அப்போது காங்கிரஸ் கொடியையும் ஏற்றி வைத்து தீவிரவாத உறுதிமொழியை எடுத்தனர்.


இந்நிகழ்வின் போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி நகரத் தலைவர், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி நடைபெற்ற இரத்ததான முகாமில் 35 காங்கிரஸ் தொண்டர்கள் இரத்த தானம் செய்தனர். டாக்டர் அருள்தாஸ் தலைமையில் மருத்துவக்குழு இரத்தான முகாமை சிறப்பாக நடத்தியது. இரத்ததானம் செய்த காங்கிரஸ் தொண்டர்களைப் பாராட்டினார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்