சபரி ஐயப்பன் புகழ் பாடிய “ஹரிவராசனம்” பாடல் :நுாற்றாண்டு விழாவாக கொண்டாட முடிவு…

காரைக்குடியில் ஐயப்பா சேவா சமாஜம் அமைப்பின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழுக் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் புகழ் பாடிய ஹரிவராசனம் பாடல் இயற்றி நுாறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாட காரைக்குடியில் நடைபெற்ற ஐயப்பா சேவா சமாஜம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்மா காலணியில் அமைந்துள்ள சிவானந்தா மஹாலில் ஐயப்பா சேவா சமாஜம் அமைப்பின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளார் ஆதி கணேசன் அனைவரையும் வரவேற்றார்.


மாநில தலைவர் இராஜகோபால் துரைராஜா தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பன்னீர் செல்வம்,மாநில செயலாளர் கமலம் நீலகண்டன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்..தேசிய பொது செயலாளர் இராஜன், தேசிய செயலாளர் கணேசன் ஆகியோர் கொடியேற்றி பேசினர்.

“ஹரிவராசனம்” பாடல் நுாற்றாண்டு விழா:-

1923-ஆம் ஆண்டு கேரளாவின் கோனகத்து ஜானகியம்மாள் இயற்றிய ஹரிவராசனம் பாடல் நுாறாண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில் வரும் ஜூன் மாதம் முதல் 2024 ஜனவரி மாதம் வரை நுாற்றாண்டு விழா குழு அமைத்து வெகு விமர்சையாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.


மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு 60 கி.மீ துாரத்திற்கு ஒன்று என்ற வகையில் அன்னதானக் கூடம் அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஐயப்பா சேவா சமாஜ் மாவட்ட உறுப்பினர்கள் மதி,சுந்தர்,செல்வமணி,அண்ணாமலை,கணேசன்,கரூர் செல்வம்,வெங்கடேஷ், காரைக்குடி கரிசாமி,ஐயப்பா செல்வராஜ் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஹரிவராசனம் பாடலை தமிழில் பெண்கள் இணைந்து பாடினர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்