சிங்கார சென்னைக்கு 379-வது பிறந்த தினம் இன்று …


வந்தாரை வாழ வைக்கும் சென்னை இன்று 379-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது…..!

தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என பல பெருமைகளை கொண்டது சென்னை.

இது, 1996 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ‘மெட்ராஸ்’ என்றே அழைக்கப்பட்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியின்போதும், சென்னை முக்கிய இடம் வகித்துள்ளது.

இத்தகைய பெருமைக்குரிய சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று புனித ஜார்ஜ் கோட்டை. கிழக்கிந்திய கம்பெனியின் தென்மண்டல வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோரின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் வாங்கப்பட்டதுதான், இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை. தற்போது தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சட்டமன்றம் அமைந்திருக்கும் இடமாகவும், தலைமைச் செயலகமாகவும் இருந்து வருகிறது.