வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 3 நாள்களுக்குள் மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடற்கறையோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர்-28 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.