சூரிய புயல் நாளை பூமியை தாக்கும் அபாயம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

சூரிய புயல் ஒன்று நாளை பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக இந்த சூரியப்புயல் உருவாகியுள்ளது என தெரிவித்த விஞ்ஞானிகள், சூரியப்புயலின் பாதையில் பூமி அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த புயல் பூமியை நெருங்கும்பொழுது வானத்தில் நீல நிற கதிர்வீச்சுகள் தென்படும் என தெரிவித்த விஞ்ஞானிகள், இதனால், செயற்கைக்கோள்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சூரியப்புயலின் தாக்குதல் எப்பொழுதுதும் பூமிக்கு இருந்துகொண்டிருக்கும். அதனை பூமியின் காந்தப்புலம் கட்டுப்படுத்திவிடும்.

ஆனால், இந்த புயலின் வேகம் சற்று அதிகமாக இருப்பதால், இதனால் செயற்கைக்கோள்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும்.

செயற்கைக்கோள்கள் பாதிப்படைவதால் செல்போன்களில் சிக்னல் பிரச்சனை மற்றும் GPS பிரச்சனைகள் போன்றவை உருவாகும்.

இந்த புயலால் மனிதர்களுக்கு பெரிதளவில் இல்லை என்றாலும், புயலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அதிகமாக இருந்தால் கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு முன்பாக 1859ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதேபோன்று சூரியப்புயலின் தாக்குதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.