முக்கிய செய்திகள்

தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை : ராஜபக்ச..


விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரை, இனரீதியிலான போராக கருதக்கூடாது என்றும்,

அப்போரில் தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘இந்தியா – இலங்கை உறவுகள்; அதை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பாதை’ என்ற தலைப்பில் தில்லியில் நடந்த கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் செயல்பாட்டானது இலங்கை எல்லையுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தியா வரை நீண்டது.

இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பலரை படுகொலை செய்தனர் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது.

இந்தியாவுடன் இணக்கமான நட்புறவு வைத்துக்கொள்வது மற்றும் இருநாடுகளும் பரஸ்பரம் முழுவதும் புரிந்து கொள்வது ஆகியவை தனது எதிர்கால வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாகும் என்று ராஜபக்ச கூறியதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

அணுசக்தி விநியோக குழுவில் (NSG) உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி: அமெரிக்கா..