திருவண்ணாமலை தீபத்திருவிழா: பூத வாகனத்தில் அண்ணாமலையார் வீதியுலா..

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இவ்வாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையும் மாலையும் பஞ்சமூர்த்திகளுடன் உற்சவத் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இன்று 3-ஆம் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் பூத வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமதே பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.

20.11.2023 வெள்ளி கற்பக விருட்சம்,வெள்ளி காமதேனு வாகனத்தில் அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் திருவீதிகளில் பவனி வருகின்றனர். 21.11.2023 அன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதிஉலா நடைபெறுகிறது.

23.11.2023 அன்று பஞ்மூர்த்திகள் மகாரதத்தில் தேர்திருவிழா நடைபெறும்.


26.11.2023 அன்று விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் மலையின் உச்சியில் ஏற்றப்படும். முன்னதாக காலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம்.அறநிலையத்துறை,சுகாதாரத்துறை,காவல் துறை இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

செய்தி & படங்கள்
ஆனந்
திருவண்ணாமலை