சாதிக்க ஏதும் தடையில்லை..: இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின் ஐபிஎஸ் ஆன அம்பிகா ஐபிஎஸ்…

வறுமையின் காரணமாக 14 வயதில் திருமணம் செய்து விட்டனர்.
18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய் ஆனார்.
கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவருடன் அணி வகுப்பைக் காணச் சென்றார்.
அங்கிருந்த ஒருவருக்கு
கணவர் சல்யூட் அடிக்க,
” ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?” என்று கேட்டார்
“அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்” என்றார் கணவர்..
தானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் நிறுத்திக் கொண்டு
அதை வெளியில் சொல்லாமல் முதற்கட்டமாக
புத்தகங்களை வாங்கிப் படித்து தனித்தேர்வு எழுதி10th, +2, டிகிரி ஆகியவற்றை கடின உழைப்புக்கு இடையே முடித்தார் .
பிறகு UPSC தேர்வுக்கு இரவு பகலாக குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார் .
இறுதியில் லட்சியக் கனவாகிய IPS தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆனார்.
முதல் சல்யூட் கணவர் அடித்தார். இன்று, “பெண் சிங்கம்” என்ற பட்டத்துடன்
பம்பாயை வலம் வருகிறார் DCP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!
எழுதுவதற்கு சில நிமிடங்கள் ஆனது இவரைப் பற்றி
ஆனால் எவ்வளவு நாள் தூக்கம் இன்றி
இவர் நம்பிக்கையோடு கடினமாக உழைத்து இருப்பார் ..பத்தாவது கூட முடிக்காத நபர் இன்று ஐபிஎஸ் ஆகி உள்ளார் என நினைக்கும் போது இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை…
திருமணத்திற்கு பிறகு படிப்பது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது திருமணமான பெண்களுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கையில் பத்தாவது முதல் ஐபிஎஸ் வரை இரண்டு குழந்தை பிறந்த பிறகு படிப்பது என்பது கனவிலும் மற்றவர்கள் நினைக்க முடியாத விஷயத்தை சாதித்த சகோதரிக்கு எதிர்காலத்தில் நிறைய விருதுகள் காத்திருக்கிறது…
படித்ததில் பிடித்தது
முகநுால் பதிவு