முக்கிய செய்திகள்

எம்ஜிஆர் மடியில் வெங்கட் பிரபு!

எம்ஜிஆர் மடியில் சிறுவனாக வெங்கட் பிரபு

நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் ஓர் அரிய நிழற்படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு, வெங்கட் பிரபு சிறுவனாக இருந்த போது, மிருதங்கக் கலைஞராக அவரை அரங்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு வருகை தந்திருந்த அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், மிருதங்கக் கலைஞனான சிறுவன் வெங்கட் பிரபுவை, தனது மடியில் தூக்கி வைத்து வாழ்த்தி இருக்கிறார். இந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு, இது தமக்கு எத்தனை பெரிய வரம் என்றும், இந்த வாய்ப்பை தமக்கு ஏற்படுத்திக் கொடுத்த தமது பெற்றோருக்கும் நன்றி என்றும் அதில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Venkat Prabu with MGR