விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தமிழக அரசு அனுமதி மறுப்பு…

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பொது ஊரடங்கில் சில தளர்வுகளுடன் செப்டம்பர்-15-ம் தேதி வரை நீடித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட மத வழிபாட்டுக்கு தடை தொடரும் என அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்படாது. விநாயகர் ஊர்வலத்திற்கும் நீர்நிலைகளில் விநாயகரை கரைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இல்லங்களில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு தனி நபர்களுக்கு அனுமதி உண்டு.
அதுபோல் மாதா பிறந்தநாள் விழாக்களுக்கும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடைவிதிக்கப்படுகிறது.
வெள்ளி,சனி,ஞாயிறு ஆலயங்களில் வழிபாடு நடத்த தடை தொடரும் எனத் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.