வாக்குப்பதிவு எந்திரங்களை, கால்பந்து போல் பயன்படுத்தும் கட்சிகள் : தலைமை தேர்தல் ஆணையர் கருத்து..

தேர்தல் முடிவைப் பொறுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, அரசியல் கட்சிகள் கால்பந்தைப் போன்று பயன்படுத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குடியசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வரும் நிலையில்,

அங்கு மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தல் முடிவு சாதகமாக இருந்தால் வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி அரசியல் கட்சிகள் எதுவும் கூறுவதில்லை என்றார்.

சாதகமாக இல்லை என்றால் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது குறை கூறுவதாக அவர் தெரிவித்தார்.