இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் திமுக அறிவிப்பு..

தமிழ்நாட்டில், காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தி.மு.க. சார்பில், பூந்தமல்லி தனித் தொகுதியில், வழக்கறிஞர் கிருஷ்ணசாமியும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் R.D.சேகரும், திருப்போரூர் தொகுதியில் செந்தில் என்கிற எஸ்.ஆர்.எல்.இதயவர்மனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோளிங்கரில் அசோகனும், குடியாத்தம் தனித் தொகுதியில் காத்தவராயனும், ஆம்பூர் தொகுதியில் ஏ.சி.வில்வநாதனும், ஓசூரில் எஸ்.ஏ.சத்யாவும், பாப்பிரெட்டிபட்டியில் வழக்கறிஞர் மணியும், களம்காண்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

அரூர் தனித் தொகுதியில் கிருஷ்ணகுமாரும், நிலக்கோட்டைத் தனித் தொகுதியில் வழக்கறிஞர் செளந்தரபாண்டியனும், திருவாரூர் தொகுதியில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பூண்டி கலைவாணனும், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் T.K.G நீலமேகமும், மானாமதுரை தனித் தொகுதியில் கரு.காசிலிங்கம் என்கிற இலக்கியதாசனும், ஆண்டிபட்டி தொகுதியில் மகாராஜனும், பெரியகுளம் தனித் தொகுதியில் கே.எஸ்.சரவணக்குமாரும் போட்டியிடுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.வி.ஸ்ரீனிவாசனும், பரமக்குடி தனித் தொகுதியில் சம்பத்குமாரும், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏ.சி.ஜெயக்குமாரும் போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.