தமிழகத்தில் மதுக்கடைகள் : உயர்நீதிமன்ற தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன்  கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறியதால்

தமிழகம் முழுவதும் 41 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

அதனால் ஆன்லைன் சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட முடியாது நிலையில் அரசு எல்லை பாதுகாப்பு மிக அவசியமாக கருதப்படுகிறது.

அரசு மது வாங்க டிஜிட்டல் முறை பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய அனைத்து உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

தனிமனித இடைவெளியை காவல் அதிகாரிகள்  துரிதமாக கண்காணித்தார்கள் என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தல் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மது விற்பனை செய்வது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு விட்டு தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அது முடியாது என சொல்கிறது.

தமிழக அரசு தனது  நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பது தான் பிரச்சனை என எதிர் மனுதாரர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.