பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் : பெற்றோர்கள் கருத்து!…

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் – பெற்றோர்கள் கருத்து!…
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என பெரும்பான்மை பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து இன்று பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் இன்று மற்றும் நாளையும் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்ட பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்த படிவம் வழங்கப்பட்டு கருத்துகள் பெறப்பட்டன. தங்கள் பிள்ளைகள் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்கிற கருத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி முதல் வகுப்புகளை துவக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டால் பாதுகாப்பான முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.