விவசாயிகளை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கொலையாளியை கைது செய்யாமல் கெஞ்சுவது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி..

விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய அமைச்சரின் மகனை கைதுசெய்யாமல் உத்திரபிரதேச போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?
மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டித்தார்.

மற்ற வழக்கில் எப்படி செயல்படுவீர்களோ அதுபோல் ஏன் செயல்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார் தலைமை நீதிபதி.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திருப்தி இல்லை.

பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகிறீர்கள் அவை அனைத்தும் அறிக்கையில் மட்டும்தான் உள்ளதே தவிர செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டிப்பு தெரிவித்தார்.

இதனிடையே கொலை குற்றவாளியான ஒன்றிய அமைச்சரின் மகன் நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.