ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் யாரும் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கவில்லை மேலும் அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் உத்திரபிரதேசம் லக்கிம்பூர் செல்லவிருப்பதாக தெரிவித்தார்.
கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்பவர்களை தடுக்கிறார்கள். இன்று நான் போகிறேன் முடிந்ததை செய்யட்டும் என ராகுல் காந்தி சற்று நேரத்திற்கு முன்பு பேசியிருந்தார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன் விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்காந்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ராகுல்,பிரியங்காவுடன் 3 பேர் செல்வதற்கு உத்திரபிரதேச அரசு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.