12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : இன்று புவனேஸ்வரில் தொடங்குகிறது

12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கித் தொடர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இன்று தொடங்குகிறது.
இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. மொத்த அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், விவேக் சாகர் தலைமையிலான இந்திய அணி, பிரான்சை எதிர்கொள்கிறது.