ப.சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு : சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

September 2, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி […]

சந்திரயான் 2 : தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது

September 2, 2019 admin 0

சந்திரயான் விண்கலத்தின், தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக்கலன் தொடர்ந்து தனது சுற்றுவட்டப்பாதையில் நிலவை சுற்றும்.’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த தரையிறங்கும் கலன் […]

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு

September 2, 2019 admin 0

சென்னையில் நடந்த முரசொலி நாளிதழ் ஆசிரியர் செல்வத்தின் குடும்ப விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்தித்தார். நேற்று நடந்த கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்த விழாவில் ஸ்டாலினும் விஜய்யும் சந்தித்து பேசினர்.

அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு..

September 2, 2019 admin 0

அடுத்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த சந்திப்பு அக்டோபர் மாதம் […]

விநாயகர் சதுர்த்தி : தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

September 2, 2019 admin 0

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியாக இந்துகள் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். சிவகங்கை மாவட்டம் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில்  பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர். அதுபோல் திருச்சி மலைக் […]

வங்கிகள் இணைப்பால் யார் வேலையும் பறிக்கப்படாது : நிதியமைச்சர் நிர்மலதா சீதாராமன்..

September 1, 2019 admin 0

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும்போது வங்கி ஊழியர்களின் வேலைகள் பறிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் என […]

நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2. நிலை நிறுத்தம்…

September 1, 2019 admin 0

சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கடைசி முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிலாவை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை […]

சரியும் பொருளாதாரம் தலை நிமிர பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

September 1, 2019 admin 0

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட […]

“பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி, வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்” : மன்மோகன் சிங்

September 1, 2019 admin 0

“நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது, நாம் நீண்டகால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதை […]

தெலங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்..

September 1, 2019 admin 0

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]