தெலங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்..

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்..

இன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜநாமா செய்ய வேண்டும்.

எனவே புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான கேரளாவின் ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அது நீடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.