முக்கிய செய்திகள்

2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..


ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் என அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், டில்லியில் இன்று நடந்தது.

ராகுல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காட்சி மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தலைவர் ராகுல் பேசியதாவது: அனுபவம் மற்றும் சக்தி நிறைந்தாக செயற்குழு மாற்றப்பட்டுள்ளது. கடந்த காலம் , நிகழ் மற்றும் வருங்காலத்தை இணைப்பதாகவும் உள்ளது.

நாட்டு மக்களின் குரலாக காங்கிரஸ் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மகளிர் போராட வேண்டும் என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும் போது, 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது.

இதற்கு விவசாயம் 14. சதவீதம் வளர்ச்சி பெற வேண்டும். ஆனால், இது கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை. சமூக அமைதிக்கு உழைக்கும் ராகுலுக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

சோனியா பேசும்போது, பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அபாயகரமான ஆட்சியாளர்களிடம் இருந்து மக்களை மீட்க வேண்டும் என தெரிவித்தார்.