பிரம்மபுத்திரா நதிநீரை1000 கி.மீ. நீள சுரங்கம் தோண்டி சின்ஜியாங் பகுதிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்..

ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி, பிரம்மபுத்திரா நதிநீரை திபெத்தில் இருந்து சின்ஜியாங் பகுதிக்கு கொண்டு செல்ல சீனா திட்டமிட்டு வருகிறது. சீனாவில் யார்லங் சங்போ என அழைக்கப்படும் ஆறு, திபெத்தில் தோன்றி இந்தியாவில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் வடகிழக்கு மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் லட்சக் கணக்கானோரின் வாழ்வாதாரமாகவும் பிரம்மபுத்திரா திகழ்கிறது.
எனவே தனது எல்லைக்குள் ஆற்றின் குறுக்கே தண்ணீரை தேக்கும் வகையில் அணைகள் ஏதும் கட்டப்போவதில்லை என சீனா ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. இந்நிலையில், ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி, பிரம்மபுத்திரா நதியிலிருந்து தண்ணீரை சின்ஜியாங் பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில் சீனா திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. உயரதிகாரிகள் பரிசீலனையில் உள்ள இந்த திட்டத்திற்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. சீனா இந்த திட்டத்தை செயல்படுத்தினால், பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள வடகிழக்கு மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

குட்கா ஊழல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணையே உடனடி தேவை: ராமதாஸ்..

‘காலா’ படத்திற்கு எதிரான மனு: நீதிமன்றம் தள்ளுபடி.

Recent Posts