ரிச்சி-திரை விமர்சனம்..

ரிச்சி-திரை விமர்சனம்.


நிவின் பாலி பிரேமம் என்னும் மலையாள படம் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர், ரசிகைகளின் மனதில் நின்றவர். அவரின் நடிப்பில் முதல் படமாக தமிழில் வந்துள்ளது ரிச்சி. அவர் தனக்கென இருக்கும் இடத்தை இப்படத்தின் மூலம் தக்க வைப்பாரா? யார் இந்த ரிச்சி, என்ன செய்வான், சொல்வான் பார்க்கலாமா.

கதை

நிவின் பாலி தான் படத்தில் ரிச்சி. அப்பா பிரகாஷ் ராஜ் தேவாலய பாதிரியார். ரிச்சிக்கென ஒரு நண்பனாக நடிகர் ராஜ் பரத். இவருடைய அம்மா மீன் வியாபாரி. ரிச்சியும் ராஜும் பள்ளிக்கூடத்தில் இருந்து நெருங்கிய நண்பர்கள்.

ஒரு நாள் பள்ளிக்கூட வட்டார நண்பர்களுக்குள் வந்த சிறு சண்டையானது மோதலாகி பின் எதிர்பாராத விதமாக ஒருவன் கொலை செய்யப்படுகிறான். இந்த சம்பவம் ரிச்சியின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வளர்ந்த ரிச்சி ஐஸக் என்பரிடம் கேங் லீடராக வேலை செய்கிறார். பஞ்சாயத்து, சண்டை என டான் போல ஊரில் உலவுகிறார். இவருக்கு பெரும் உதவியாக ஆடுகளம் முருகதாஸ். ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பத்திரிக்கை துறை பெண்ணாக ஒரு நிஜ சம்பவத்தை தேடி பெரும் ஆராய்ச்சியில் இறங்குகிறார்.

இதற்கிடையில் நட்டி நட்ராஜ் மதுரை பையன். சில சூழ்நிலைகளால் கடல் கிராமத்தில் வயிற்று பிழைப்பிற்காக படகு மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். இவருக்கு ஒரு நண்பர். அவரின் தங்கையின் மேல் நட்டிக்கு காதல் வருகிறது.

ஏதோ ஒரு பஞ்சாயத்தால் நட்டியின் நண்பனை ஊரில் காணவில்லை, மாயமானவரை தேடி அவரின் தங்கையும், நட்டியும் அலைகிறார்கள். அந்நேரத்தில் ரிச்சியின் உயிருக்கு ஒரு எதிர்பாராத ஆபத்து.அதே நேரத்தில் அவரின் நீண்ட நாள் நண்பன் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன், ரிச்சி என்ன ஆனான், ஷ்ரத்தா நிஜ சம்பவத்தை தேடவேண்டிய அவசியம் என்ன என்பது தான் கதை.

படத்தை பற்றி அலசல்

நிவின் பாலி அஜித், விஜய் போன்ற பல பெரிய நடிகர்களிடம் பிரேமம் படத்திற்காக வாழ்த்துக்களை பெற்றவர். மலையாள நடிகரானாலும் தமிழில் அவர் நடித்திருந்தாலும் மலையாள சாயல் பேச்சில் தெரிகிறது. படத்தில் இவருக்கான ரோல் முற்றிலும் வித்தியாசப்பட்டது.

சாக்லேட் பாயாகவும், ரொமான்ஸ் ஹீரோவாகவும் பார்க்கப்பட்ட அவரை முற்றிலும் மாறுபட்டவராக தன்னை ரிச்சி மூலம் தனியே காண்பித்திருக்கிறார். புலியாட்டத்தை புகுந்து விளையாடுகிறார். ஆனால் கதை தேர்வில் கவனம் செலுத்தவில்லையோ என ரிச்சி கேட்கவைக்கிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் பரவலாக பேசப்படுபவர். சில படங்களில் நடித்துள்ள அனுபவமான நடிகை. படத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கவும் அதே சமயம் ரிச்சி யின் சிறுவயது தோழியாகவும் நடித்துள்ளார். ஆனால் திரைக்கதை தடுமாற்றத்தால் இவரின் கதாபாத்திரத்தின் அழுத்தம் மனசில் பதியவில்லை

ஆடுகளம் முருகதாஸ் படங்களில் சிறிய ரோலாக நடித்து வந்தாலும் அவரின் தாக்கம் பெரிதாக தெரியும். ரிச்சியையே சுற்றி வரும் இவர் நண்பனுக்காக ஒரு விசயம் செய்வார் பாருங்கள். அங்கே தனியே தெரிவார்.

சதுரங்கவேட்டை நாட்டி , ஆடுகளம் முருதாஸ் போன்ற நல்ல நடிகர்களை சரியான விதத்தில் காட்டவில்லை என்பதால் பெரிய பின்னடைவு. இவருக்கு கூட டூயட் பாடல் படத்தில்.

படத்தின் கதையை முதல் பாதியை உத்வேகத்தோடு காட்டி, இரண்டாம் பாதியில் உச்சம் தொடவைக்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன் படத்திற்க்கேற்ற இசை.

ப்ளஸ்

நிவின் பாலியின் புலியாட்டம் மட்டுமே ரசிகர்களுக்கு விருந்து.

கதைக்கேற்ற போதுமான நடிப்பு மட்டும் இவரின் பிளஸ்.

ஸ்ரத்தா, முருகதாஸ், நட்டி என கேரக்டருடன் பொருந்துகிறார்கள்.

பின்னணி இசை பலருக்கும் ஹார்ட் பீட்டாக இருக்கும்.

மைனஸ்

படம் பார்த்த பிறகு படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது பலருக்கு புரியாத புதிர்

இவர் நல்லவரா , கெட்டவரா என்ற நிவின்பாலியின் கதாபாத்திரம் ரசிகர்களை குழம்பவைக்கிறது, அதுமட்டுமில்லாமல் படத்தில் இவரது மொத்த போர்ஷனும் வெறும் 45 நிமிடத்துக்குள் தான் இருப்பது போல் ஒரு உணர்வு தந்தது ரசிகர்களின் ஏமாற்றம். .

நல்ல டீம் அமைந்திருந்தும் இயக்குனர் திரைக்கதையில் தடுமாறிவிட்டார் போல. காமெடிகள் என தனியே ஏதும் இல்லை.

ரிச்சி ஒரு கன்னட சூப்பர்ஹிட் ரீமேக் படம் என்கிறார்கள். நம்பமுடியவில்லை

மொத்தத்தில் ரிச்சி ஓகே. நிவின் பாலியின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையோ என்ற கேள்வி இருக்கிறது.

 

சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவிகளில் தொடர்வது நல்லதா?:மு.க.ஸ்டாலின் பேட்டி

சேகர் ரெட்டியிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் பெற்றார்களா?: டைம்ஸ் நவ் வெளியிட்ட உண்மை

Recent Posts