காவிரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஸ்கீம் என்று ஒரு செயல்திட்டத்தைத் தான், கூறியுள்ளோமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றக் கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்திலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசோ 6 வார காலம் வரை மௌனம் காத்துவிட்டு, “ஸ்கீம்” னா என்ன என்று விளக்கம் கோரி, கடந்த சனிக்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழக அரசின் மனுவை வரும் 9ஆம் தேதி விசாரிப்பதாக கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாகவும், உரிய தண்ணீர் அந்த மாநிலத்திற்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .அதே நேரத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதி உத்தரவில் தாங்கள் குறிப்பிட்டது ஸ்கீம் என்ற ஓர் ஒருங்கிணைந்த செயல்திட்டமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் பற்றியதல்ல எனத் தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதி வழங்கும் எனக் காத்திருக்கும் தமிழகத்திற்கு இது பேரிடியாக விழுந்துள்ளது. என்ன செய்யப் போகிறது தமிழகம்?
we said about only scheme: SC