நடிகர் சல்மான் கான் 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் நடுவில் மான் வேட்டையில் ஈடுபட்ட வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சல்மான்கான் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தபு, சைஃப் அலிகான் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.