இருவருக்கு ஓரே பான் எண் வழங்கி குளறுபடி செய்துள்ளது வருமான வரித்துறை அலுவலகம். வாங்காத கடனுக்கு கடன் வாங்கியதாக சிபில் தகவல் தந்ததால்,அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரி வருமான வரி அலுவலகத்தில் முறையிட்டார். அவர் பலமுறை முறையிட்டும் வருவானவரி அலுவலகம் கண்டுகொள்ளவில்லை.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் காவல் உதவி ஆய்வாளாராக பணிபுரியும் அதிகாரி சேகர் , கடந்த 2008-ம் வருடம் பான் எண்ணுக்கு மனுத் தாக்கல் செய்து பான் கார்டு பெற்றுள்ளார். தனது வங்கியிலும் பான் எண் பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் வீடுகட்ட வங்கியில் கடனுக்கு மனு அளித்துள்ளார். வங்கி அவரது சிபில் தகவலைப் பார்த்த போது அவர் பல வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்து அவரின் மதிப்பெண் குறைவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
வீட்டுக்கடன் பெற வந்த அதிகாரியிடம் வங்கி மேலாளர் மேற்கூறிய விபரத்தை தெரிவித்துள்ளார். அதிர்ந்த காவல் அதிகாரி நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
வங்கி அதிகாரி வருமான வரித்துறை இணையத்தில் பான் எண் பதிவிட்டு தகவல் தேடும் போது. 2012-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தாரைச் சார்ந்த சேகர் என்பவருக்கும் இதே எண் கொன்ட பாண் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இரண்டு பான் கார்டுகளிலும் எண்,பிறந்த தேதி,பெர்,தகப்பனர் பெயர் ஒன்றாக இருந்துள்ளது. ஆனால் புகைப்படமும், கையொப்பமும் மாறியிருந்தது.
அதிர்ந்த காவல் அதிகாரி நேரடியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் சென்றார். அங்கு தனது பெயரில் ஆள் இருக்கிறாரா என விசாரித்துள்ளார். பான் கார்டில் உள்ளது போல் பெயர், தகப்பனார் பெயர்,பிறந்ததேதி அனைத்து கொண்ட நபரை கண்டறிந்தார். அவரிடம் விசாரித்ததில் வீடு,தொழிலுக்கு பல வங்கிகளில் கடன் வாங்கியிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சென்னை தலைமை வருமான வரித்துறை அலுவலகத்திலும் ,மதுரை வருமான வரித்துறை அலுவலகத்திலும் மனுக் கொடுத்து குளறுபடி பற்றி தெரிவித்தள்ளார் காவல் அதிகாரி. ஆனால் வருமான வரித்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, காவல் அதிகாரியும் பல முறை முறையிட்டும் வருமான வரித்துறை கண்டுகொள்ளவேயில்லை.
பான் எண் வழங்கியதில் குளறுபடி செய்த வருமான வரித்துறை இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து வருகிறது. காவல் அதிகாரியோ மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
தான் ஒரு காவல் அதிகாரியாக இருந்தும் கூட நம்மை வருமான வரித்துறை கண்டு கொள்ளவில்லை என ஆதங்கப்பட்டார்.
காவல்துறை அதிகாரியாக பணிபுரிபவர்களுக்கே இந்த கதி என்றால் சாமானியனின் நிலை என்ன?..