“தமிழகத்தில் சமூக நீதி தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. இட ஒதுக்கீடு மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எந்த காலத் திலும் முன்னேற்ற முடியாது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆங்கிலேயர் காலத்தில் தேவேந்திரகுல வேளாளர்களின் ஏழ்மையை கணக்கில்கொண்டு, அவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்தனர். எஸ்சி பட்டியலில் சேர்க் கப்பட்டதால் கடந்த 70 ஆண்டு களில் அரசாங்க துறைகளில் ஒருசில சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்தனர். ஆனால், ஒட்டுமொத்த மக்களுக்கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
தேவேந்திரகுல வேளாளர் கள் எஸ்சி பட்டியலில் சேர்க்கப் பட்டதால் சமூக, அரசியல், பொருளாதார தளத்தில் முன்னேற முடியாமல் உள்ளனர். தகுதி, திறமை இருந்தாலும் எஸ்சி என்ற முத்திரை அரசியல், பொருளாதார தளத்தில் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.எனவே, இம்மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
எஸ்சியில் இருந்து எம்பிசிக்கு மாற்றும் கோரிக்கையை வலி யுறுத்துவதுபோல், பிற்காலத்தில் எம்பிசியில் இருந்து பிசி, பின்னர் எப்சிக்கு மாற்றும் கோரிக்கையும் படிப்படியாக வலியுறுத்தப்படும்.
தமிழகத்தில் சமூக நீதி தவறுதலாக புரிந்துகொள்ளப்படு கிறது. இடஒதுக்கீடு மூலம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் எந்த நேரத்திலும் முன்னேற்ற முடியாது. 100 ஆண்டு காலத்துக்கு முன்னர் ஒரேயொரு சமுதாயம் மட்டும் மேலாதிக்கம் செய்தபோது, இட ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த சமுதா யத்தை முன்னேற்ற அந்த ஒரு பார் முலாவை மட்டும் பயன்படுத்துவது சரியல்ல.
குடும்ப ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர 2 தேசிய கட்சிகளும் உதவுகின்றன. தமிழக அரசியலில் எல்லாவித தவறுகளுக்கும் 2 குடும்ப ஆட்சிகள்தான் காரணம். மீண்டும் குடும்ப ஆட்சி வருவது தமிழகத்துக்கு பேராபத்து. குடும்ப ஆட்சியை ஒழிக்க பல அரசியல் சக்திகள் ஒருங்கிணையும்.
இவ்வாறு அவர் கூறினார்.