சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டப்பேரவைமற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவிமயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்!
* ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க. அரசை ஒருபோதும் அனுமதியோம்!
*வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்!
* காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும்; கடலில் வீணே கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை !
* பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்க!
* பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து, 10ஆம் தேதி நடைபெறும் “பாரத் பந்த்” வெற்றி பெற ஒத்துழைப்போம்!
* குட்கா ஊழலில் கொழித்த அமைச்சரை “டிஸ்மிஸ்” செய்க! டி.ஜி.பியைப் பதவி நீக்கம் செய்க!
* ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி தி.மு.கழகத்தின் சார்பில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’