எடப்பாடி பழனிசாமி பதவி விலகி இருக்க வேண்டும்: டிடிவி தினகரன்

டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட போதே முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகி இருக்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:

எங்கள் தரப்பில் உள்ள 23 எம்எல்ஏக்கள் தொகுதிகளிலும் மக்களை வஞ்சிக்கும் விதமாக எந்தத் திட்டங்களையும் அரசு நிறைவேற்றவில்லை. அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளைக் கூட அரசு தீர்க்கவில்லை.

இதனை கண்டித்து அரவக்குறிச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதை போன்று அனைத்து தொகுதிகளிலும் உண்ணாவிரத, கண்டன போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்

18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என எஙக்ளுக்கு ஆதரவான தீர்ப்பு வரும். நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளன. சிலர் எங்களுடன் பேசியும் வருகின்றனர். விரைவில் வெளிப்படையாக கூட்டணி குறித்து அறிவிப்போம்

எங்களுடைய ஒரே எண்ணம் கட்சியையும் சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஆகும். அதற்காகவே பாடுபட்டு வருகிறோம். எங்களை பார்த்து பயமில்லை என்றால் மேடைக்கு மேடை ஏன் எங்களையே பேச வேண்டும் ?

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசாங்கம் முறைப்படி உச்சநீதிமன்றத்தை அணுகி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வழிபாட்டில்  பழைய நிலையே நீடிக்கும் என்ற தீர்ப்பை பெற வேண்டும்

டென்டர் முறைகேட்டில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்தே முதலமைச்சர் பழனிச்சாமி பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் மக்களாக பதவியை விட்டு  இறக்காதவரை அவராக பதவி விலக மாட்டார், இருக்கையை இறுகப் பிடித்து அமர்ந்திருக்கிறார்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Edappadi Palanisamy should have resigned in Tender Scam: TTV Dinakaran

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்: #Me too சர்ச்சை குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து

வடகிழக்கு பருவமழை 26-ந்தேதி தொடங்கும் : வானிலை மையம் அறிவிப்பு..

Recent Posts