இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிப்பதாக, அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர், அதிபர் சிறிசேனாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிக்கிறார்.
ஜனநாயகத்தை காக்கவும்,நல்ல நிர்வாகத்திற்காகவும் அரசின் தலைவர் என்ற உத்தரவை பெற்றுள்ளார்.
இதனால், ரணிலின் அதிகாரத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். பார்லிமென்ட் முடக்கம் குறித்து சபாநாயகருடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.
பார்லிமென்டை நவ.16 வரை முடக்கி வைத்தது, நாட்டில் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தும்.
பார்லிமென்ட் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.