ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூடுவது வழக்கம். அதபோல் இப்போது ஜனவரி மாதம் முதல் வாரம் ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்க உள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும்.
அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். மொத்தம் 5 நாட்கள் கூட்டம் நடைபெறும். இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். இதேபோல் திருப்பரங்குன்றம் எம்.எல். ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும்.
ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பேரவைக் கூட்டத் தொடரின் போது ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும்