முக்கிய செய்திகள்

சிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..

சிங்கப்பூரில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது..

தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில் 1859 இல் இக் கோயில் கட்டப்பட்டது.

தைப்பூசம், நவராத்திரி, கந்த சஷ்டி, லெட்சார்ச்சனை ஆகிய விழாக்கள் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன.

கந்த சஷ்டிவிழா கடந்த நவம்பர் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 3-ம் திருவிழாவில் கந்த சஷ்டி பராயணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் தெண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

வரும் 13-ம் தேதி சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு நடைபெறவுள்ளது.

சிங்கப்பூரில் ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.