கனமழை மற்றும் மோசமான வானிலை: புயல் பாதித்த பகுதிகளில் முதல்வரின் ஆய்வு பயணம் ரத்து..

கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வா் பழனிசாமி தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாா்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் பழனிசாமி இன்று ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனா்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையையும் வழங்கினா்.

இதனைத் தொடா்ந்து நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், நாகை, திருவாரூா் ஆகிய பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் தனது பயணத்தை பாதியில் ரத்து செய்து முதல்வா் பழனிசாமி மீண்டும் திருச்சிக்கு சென்றுள்ளாா்.

ஊழலை ஒழிக்க கசப்பு மருந்து : மத்திய பிரதேச பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவர் விடுதலை : ஆளுநர் மாளிகை விளக்கம்..

Recent Posts