வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு…

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.

கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச நாடாளுமன்றத் தலைவராக ஷேக் ஹசீனா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், அதிபர் முகமது அப்துல் ஹமீது, ஷேக் ஹசீனாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அந்நாட்டு தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்திப்பு…

சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு ரத்து : உச்சநீதிமன்றம் ..

Recent Posts