தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொங்கல் பரிசு வழங்கத் தடை விதிக்க வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வறுமைக் கோட்டுக்கு மே் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை விதித்தது.
மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசாக பொங்கல் பொருட்களான பச்சரிசி,சர்க்கரை,முந்திரி பருப்பு,உலர்ந்த திராட்சை,ஒரு அடி கரும்பு இவற்றை அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதனால் வெள்ளை அட்டை கொண்ட குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 கொடுக்க மாட்டார்கள்.