டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க இயலாது : தேர்தல் ஆணையம்..

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதில் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.

தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியுமா? என்பதை ஆஜராகி விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி தேர்தல் ஆணைய வழக்கறிஞர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என பதில் கூறி உள்ளார்.

கொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன் திமுக ஆர்ப்பாட்டம்..

தொகுதி பங்கீடு குறித்து பேச தி.மு.க. விரைவில் அழைக்கும் : திருமாவளவன்..

Recent Posts