சென்னை டி.எம்.எஸ். – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை ஆரம்பமாகியுள்ளதை கொண்டாடும் வகையில் நேற்றும்,

இன்றும் பயணிகள் சென்னை நகர் முழுவதும் இலவசமாக மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் வழக்கமாக மெட்ரோ ரயிலில் செல்வோர் மட்டுமின்றி இலவசமாக பயணிப்பதற்கு ஏராளமான பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார்கள்.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது.

அலுவலகங்களுக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர், அவசர வேலையாக செல்வோர் என பல தரப்பினர் இந்த திடீர் சேவை தடையால் பாதிக்கப்பட்டனர்.

சேவை பாதிப்பு குறித்து முந்தைய நிறுத்தத்திலேயே கூறியிருந்தால் தாங்கள் பேருந்து அல்லது மாற்று ஏற்பாடுகள் மூலமாக அலுவலகங்களுக்கு சென்று இருப்போம் என்றும் பாதியிலேயே இறக்கிவிட்டதால் மிகவும் சிரமமாக உள்ளதாக பயணிகள் புலம்பிச் சென்றனர்.

காலை 10 மணி முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,
]
வல்லுநர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இன்னும் சில மணிநேரங்களில் சேவை தொடங்கப்படும் என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்

திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

Recent Posts