மதிமுக வேட்பாளர் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ

தேர்தல் அலுவலர் ஒதுக்கும் தனிச் சின்னத்தில் தான் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்…

தேர்தல் அலுவலர் ஒதுக்கும் தனிச் சின்னத்தில் தான் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்.

மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர், தேர்தல் அலுவலர் ஒதுக்கும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவார் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மதிமுக மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. மற்றொரு இடம் மாநிலங்களவையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக உதயசூரியன் சின்னத்தின் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக இன்று மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அதன்படி சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார்.

அவருக்கு மட்டும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக சின்னங்களை பெற்று அவற்றை குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும். இதனால், திமுக கட்சி கூட்டணி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, திமுக தலைமை வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் சித்திரை திருவிழாவிற்காக தேர்தல் தேதி மாற்ற இயலாது தேர்தல் ஆணையம் ..

அ.தி.மு.கவில் இணையவேண்டிய அவசியம் இல்லை : மதுரை ஆதினம் கருத்துக்கு தினகரன் மறுப்பு..

Recent Posts