உலகிலேயே உயரமான சுரங்க வழி சாலை..: சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..

சீனாவில் அமைக்கப்பட்டுவந்த உலகிலேயே மிகவும் உயரமான சுரங்க வழி சாலையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள லாசா எனும் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4750 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த இருவழிச்சாலையானது, 5.7கி.மீ தூரம் வரைக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலையானது சுமார் 18 கி.மீ தூரப் பயணத்தை 5.7 கி.மீ தூர பயணமாக குறைத்து பயணிகளுக்கு உதவுவதாக கூறப்படுகிறது.

சுமார் 2000 பணியாளர்களைக் கொண்டு சுமார் 4 ஆண்டுகளாக இந்தச் சாலையானது வடிவமைக்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையிலிருந்து முன்னாள் பெண் ஊழியர் திடீர் விலகல்

உழைப்பாளர் தினம்: தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி

Recent Posts