ஆகஸ்ட் 19 ம் தேதி காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை திறக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
காஷ்மீரில் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பதற்றத்தை தவிர்ப்பதற்காக காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் 10 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.
இவற்றை வரும் ஆக.,19 ம் தேதி மீண்டும் திறக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.. அதே சமயம் தொலைபேசி மற்றும் மொபைல் போன் சேவையை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் நீக்க உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் அரசு தெரிவித்திருந்தது.
இதனால் இன்று முதல் தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட கவர்னர் சத்யபால் மாலிக் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
கள நிலவரமும் தினமும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாலும், சுப்ரீம் கோர்ட்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும் ஆக., 19 முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களை திறக்க காஷ்மீர் அரசு முடிவு செய்தள்ளது.
. தொடர்ந்து நிலைமை கண்காணிப்பட்டு அடுத்த சில நாட்களில் மொபைல், இன்டர்நெட் சேவையும் சீர் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.