தவறவிடாதீர் : தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..

பொதுமக்களே தவறவிடாதீர் தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் 43,051 மையங்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெற உள்ளது.

இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை, அந்தந்த மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து பல்வேறு விரிவான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

70.50 லட்சம் குழந்தைகள்: இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 70.50 லட்சம் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகள்,

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) காலை 7 முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் 1,652 சொட்டு மருந்து மையங்களும்,

1,000 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் பிறந்த குழந்தைகள், பிற மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள்,

ஓரிரு நாள்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள் என அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும்.

தனியாா் மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய அவா்களின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக அரசுப் பள்ளி ஆசிரியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள்,

தன்னாா்வலா்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் சுமாா் 2 லட்சம் போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

முதல்வா் இல்லத்தில் நிகழ்வு: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை,

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறாா். சென்னையில் உள்ள அவரது முகாம் இல்லத்தில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது.

குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை புகட்டி, மாநில அளவிலான முகாமை அவா் தொடக்கி வைக்கிறாா்.

சென்னையில்…: பெருநகர சென்னை மாநகராட்சியில் 5 வயதுக்கு உள்பட்ட 7.03 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றில் 1,438 நிரந்தர சொட்டு மருந்து மையங்களும்,

ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களிலும், மெரீனா கடற்கரை, தீவுத் திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புகா் பேருந்து நிலையம் ஆகியவற்றில் 165 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்கள்,

42 நடமாடும் மையங்கள் என மொத்தம் 1,645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து வழங்கும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த என சுமாா் 7 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

சானியா மிர்ஸா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார்

மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..

Recent Posts