முதல்வர் பதவியில் இருந்து கமல்நாத் ராஜினாமா …

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்தார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இன்று பிற்பகலில் ஆளுநர் லால்ஜி டாண்டனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை கமல்நாத் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததால் மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால்,

இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜிநாமா செய்ததால், காங்கிரஸ் கட்சியின் பலம் 86 ஆக ஆனது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவா்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியிலிருந்து கடந்த வாரம் விலகினாா்.

அவரது ஆதரவாளா்களான 22 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். அவா்களில் 6 பேரின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டு விட்டாா்.

எஞ்சியுள்ள 16 எம்எல்ஏக்களின் கடிதம் மீது இன்னும் அவா் முடிவெடுக்கவில்லை.

இதனிடையே, பேரவையில் முதல்வா் கமல்நாத் கடந்த திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநா் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டிருந்தாா். எனினும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக,

மத்தியப் பிரதேச சட்டப் பேரவை மாா்ச் 26-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவா் சிவராஜ் சிங் சௌஹான் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல், அதிருப்தி எம்எல்ஏக்கள் சாா்பிலும், காங்கிரஸ் சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும்,

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“2G இழப்பு என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்தது ஏன்?” : ஆ.ராசா கேள்வி..

தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி உணவகங்கள், கடைகள் மூடப்படும்..

Recent Posts