இந்தியாவில் , ஒரே நாளில், 18,552 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுதும், ஒரே நாளில், 18,552 பேரிடம், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5, 08 ,953 ஆக உயர்ந்துள்ளது. 1,97 ,387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2, 95,881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 384 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்துள்ளது.